ஆஸ்திரேலிய ஓபன்: 7வது முறையாக சாம்பியனானார் ஜோகோவிச்

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலை நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
 | 

ஆஸ்திரேலிய ஓபன்: 7வது முறையாக சாம்பியனானார் ஜோகோவிச்

 ரபேல் நடாலை வீழ்த்தி நோவோக் ஜோக்கோவிச் 7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி இதுவாகும். இதில் அனைவரும் எதிர்பார்த்திருந்த இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் இரண்டு நட்சத்திர வீரர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். 

இதில் ஜோக்கோவிச் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆட்டத்தின் முடிவில் உலகின் நம்பர் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடாலை நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அவர் 6-3, 6-2,6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். 

 

 

இந்த இரு விரர்களும் நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு பின்னர் விளையாட வந்தவர்கள். எனவே இருவருக்கும் இடையேயான போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஜோக்கோவிச் இதற்கு முன்னர் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

மேலும் இதுவரை நேர் செட்களில் நடால் தோல்வி அடைந்தது இல்லை என்ற பெருமையையும் ஜோகோவிச் முறியடித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP