Logo

ஆஸ்திரேலியன் ஓபனில் இருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார்.
 | 

ஆஸ்திரேலியன் ஓபனில் இருந்து விலகினார் ஆண்டி முர்ரே


இந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர்  ஆண்டி முர்ரே  அறிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று அந்த போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து தற்போது இந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க போவதில்லை என முர்ரே அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் விளையாடிய முர்ரே அதன் பின்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற அவர் அதிலும் பாதியிலேயே வெளியேறினார். தற்போது ஓய்வு எடுப்பதற்காக முர்ரே தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010,2011,2013,2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் கலந்து கொண்ட முர்ரேவால் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்த முறை எப்படியாவது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இருந்த முர்ரே தற்போது அந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து முர்ரே, "இந்த ஆண்டு மெல்பெர்னில் நான் விளையாட மாட்டேன். போட்டியில் விளையாட நான் இன்னும் தயாராகவில்லை. எனது சொந்த ஊருக்கு செல்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் விளையாட வருவேன் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP