1. Home
  2. விளையாட்டு

சச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்

சச்சினின் திறமைகள் குறித்து அப்போதே தெரியும்: சுனில் கவாஸ்கர்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கரின் உலகத்தரம் வாய்ந்த திறமைகளை குறித்து ஒரு சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு, (இதே நாள் ) நவம்பர் 15, 1989 அன்று, கிரிக்கெட் ஐகான் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் அறிமுகமானார். அவர் தனது முதல் இன்னிங்சில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் அவர் பேட்டிங் செய்ய ஒரே தடவை மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அப்போதில் இருந்து, ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ கிட்டத்தட்ட ஒவ்வொரு பேட்டிங் சாதனையையும் முறியடித்து வரலாற்று புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கரின் உலகத்தரம் வாய்ந்த திறமைகளை குறித்து ஒரு சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 15 வயதான சச்சினை பார்த்தபோது கவாஸ்கர் கூறினார், அவர் பெருமைக்கு விதிக்கப்பட்டவர் என்பது அவருக்குத் தெரியும்.

‘பந்துவீச்சாளர்கள் வலைப்பயிற்சியின் போது 22 யார்ட்ஸ்க்கு பதிலாக 20 யார்ட்ஸ்களில் பந்துகளை வீசினார்கள் சச்சினுக்கு. பயிற்சியாளர் குல்கர்னி மிகவும் சச்சினை கூர்ந்து கவனித்தார். சச்சின் பேக் ஃபுட்டில் பிரமாதமாக ஆடி அசத்தினார். இதற்கு சச்சின் எடுத்த கொண்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன். 15 வயதுடைய சச்சின் விரைவான பந்துவீச்சை விளையாட அதிக நேரம் எடுத்துக்கொண்டார் என்றார். அப்போது அறிகுறி தென்பட்டது இந்த மனிதனிடம் சிறப்பு வாய்ந்த ஒன்று உள்ளது’ என்று இந்தூரில் நடந்த இந்தியா-பங்களாதேஷ் டெஸ்டின் 2 வது நாளில் கவாஸ்கர் இவ்வாறு தெரிவித்தார்.

<

>

இதற்கிடையில், தனது சர்வதேச அறிமுகத்தின் 30ஆவது ஆண்டு விழாவை கொண்டாட முடிவு செய்த சச்சின், தான் மிகவும் நேசித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்டை விளையாடினார். மும்பையில் உள்ள உள்விளையாட்டரங்கில் பயிற்சியின்போது, சர்வதேச அரங்கில் அவருக்கு நிறைய ரன்கள் கிடைத்த சில காட்சிகளைப் பயிற்சி செய்வதில் சச்சின் நேரம் செலவிட்டார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like