பாவம்...அவங்கள விடமாட்டாங்க போல... சானியாவை வம்புக்கு இழுத்துள்ள பாகிஸ்தான் நடிகை!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றதைவிட, பாகிஸ்தான் வீரரும், தமது கணவருமான சோகிப் மாலிக்குடன், சானியா மிர்ஸா இரவு உணவருந்த, லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றது தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
 | 

இந்தியாவுடனான முக்கிய போட்டி இருக்கும் நிலையில், அதற்கு முதல் நாள் இரவு, உங்கள் கணவரை நல்ல ஓய்வெடுக்க அறிவுறுத்தாமல். அவரை ஹோட்டலுக்கு செல்ல அனுமதித்ததுடன், அவருடன் நீங்கள் எப்படி செல்லலாம் என்ற ரீதியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வெறியர்கள் சானியாவை ட்விட்டரில் சாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க,  பாகிஸ்தானின் பிரபல நடிகையான வீணா மாலிக், சானியா மிர்ஸாவை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சானியா, உண்மையில் உங்கள் குழந்தையை எண்ணி கவலைப்படுகிறேன். துரித உணவுகள் பரிமாறப்படும் ஹோட்டலுக்கு உங்கள் குழந்தையை அழைத்து சென்றுள்ளீர்களே... அந்த உணவுகள் குழந்தைகளின் உடல்நலத்துக்கு  மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என, ஓர் தாயாகவும்,  விளையாட்டு வீராங்கனையாகவும் உங்களுக்கு தெரியாதா என்ன?" என வீணா மாலிக் கேள்வியெழுப்பியுள்ளார்.

வீணா மாலிக்கின் கேள்விக்கு,  சானியா மிர்ஸா தமது  ட்விட்டர் பதிவில் சாட்டையடியாக பதிலளித்துள்ளார். அதில், "எனது குழந்தையை நான் துரித உணவகங்களுக்கு அழைத்து சென்றதில்லை. உலகில் வேறு யாரையும்விட என் குழந்தை மீது எனக்கு அதீத அக்கறை உள்ளது. அத்துடன், நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  உணவியல் ஆலோசகர் (டயட்டீசியன்) அல்ல. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என நான்  தீர்மானிக்க முடியாது. விளம்பரத்துக்காக இதுபோன்று பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். உங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி" என சானியா காட்டமாக பதிலளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP