பிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி; முதலிடம் சென்றது

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், எவர்ட்டனுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டி 2-0 என அதிரடியாக வெற்றி பெற்று, லீக் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
 | 

பிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி; முதலிடம் சென்றது

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், எவர்ட்டனுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டி 2-0 என அதிரடியாக வெற்றி பெற்று, லீக் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடப்பு சாம்பியனான சிட்டி, லிவர்பூலை விட, மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில், மான்செஸ்டர் சிட்டி எவர்ட்டனுடன் மோதியது. கடந்த சில போட்டிகளில் தடுமாறி வந்த எவர்ட்டன், இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கியது.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பலம்வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி, நெருக்கடி கொடுத்து சிறப்பாக விளையாடியது. பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும், சிட்டியால் கோல் அடிக்க முடியவில்லை. எவர்ட்டன் அணியின் கோல்கீப்பர் பிக்போர்டு, சிறப்பாக விளையாடி பல்வேறு வாய்ப்புகளை தடுத்தார். முதல் பாதியில் டிபென்ஸ் வீரர் ல போர்ட்டே, தலையால் முட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சிட்டியின் ஜீசஸ், ஆட்டம் முடியும் நேரத்தில் ஒரு கோல் அடித்து, 2-0 என வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியை தொடர்ந்து, ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிக்கு இணையான புள்ளிகளை பெற்றது. ஆனால், அதிக கோல்கள் அடித்துள்ளதால், சிட்டி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது . ஆனால், இது தற்காலிகம் தான். இன்று நடைபெறும் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றால், மீண்டும் முதலிடத்திற்கு இடத்திற்கு செல்லும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP