மான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்!

பிரீமியர் லீக் கால்பந்தில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியை, லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த் வெற்றியை தொடர்ந்து பிரீமியர் லீக்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
 | 

மான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்!

பிரீமியர் லீக் கால்பந்தில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியை, லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து பிரீமியர் லீக்கில் முதலிடத்தை லிவர்பூல் தக்கவைத்துள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் க்ளப் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணியும் லிவர்பூல் அணியும் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றிகளை குவித்து வந்தன. கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியன்களான சிட்டி, செல்சி அணியிடம் 2-0 என தோற்றது. இதைத் தொடர்ந்து லிவர்பூல் முதலிடத்தை பிடித்தது. 

முன்னதாக மான்செஸ்டர் சிட்டி, பலம்வாய்ந்த எவர்டன்னை வீழ்த்தி முதலிடம் சென்றது. இதைத் தொடர்ந்து லிவர்பூல் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில், பரம எதிரிகளான யுனைட்டடுடன் மோதியது. இந்த போட்டியில், ஆரம்பம் முதல் லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. தொடர்ந்து கோல் வாய்ப்புகளை லிவர்பூல் உருவாக்க, யுனைட்டட் போராடியது. 24வது நிமிடத்தில் லிவர்பூலின் மானே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 33வது நிமிடத்தில் லிவர்பூல் செய்த ஒரு தவறால், லிங்கார்டு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 

தொடர்ந்து லிவர்பூல் முழுக்க முழுக்க அட்டாக் செய்து விளையாடியது. இரண்டாவது பாதியில், மாற்று வீரராக களமிறங்கிய ஷக்கிரி, 73வது நிமிடத்திலும், 80வது நிமிடத்திலும் அதிரடியாக இரண்டு கோல்களை அடித்து லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP