வெற்றி பாதைக்கு திரும்பியது மான்செஸ்டர் யுனைட்டட்

சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் ஜோஸே முரினோ மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் போட்டியில், யுனைட்டட் கார்டிப்ப் அணியை 5-1 என துவம்சம் செய்தது.
 | 

வெற்றி பாதைக்கு திரும்பியது மான்செஸ்டர் யுனைட்டட்

சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் ஜோஸே முரினோ மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் பிரீமியர் லீக் போட்டியில், கார்டிஃப் அணியை, யுனைட்டட் 5-1 என துவம்சம் செய்தது.

பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2016ம் ஆண்டு ஜோஸே முரினோ நியமிக்கப்பட்டார். முரினோவின் தலைமையில் அந்த அணி பிரீமியர் லீக்கை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், யுனைட்டட் அணியால் அதை வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்து தங்கள் பரம எதிரிகளான மான்செஸ்டர் சிட்டி, கோப்பையை வெல்வதை வேடிக்கை பார்த்தது யுனைட்டட். 

இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வென்று விடலாம் என நம்பிக்கையால் இருந்த ரசிக்கர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. தொடர் தோல்விகளால் யுனைட்டட் திணறியது. 17 போட்டிகளில், 5 தோல்வி,, 5 டிரா என மிகவும் மோசமாக விளையாடியது யுனைட்டட். இது போதாததற்கு, வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இடையே தொடர் பிரச்னை. இதையெல்லாம் தீர்க்க வேறு வழியில்லாமல், முரினோவை நீக்கியது யுனைட்டட் தலைமை.அதன்பின், முன்னாள் யுனைட்டட் வீரர் ஓலே கன்னர் சோல்ஸ்க்ஜார், இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

அவரது கீழ் யுனைட்டட் நேற்று கார்டிஃப் அணியுடன் மோதியது. இந்த போட்டியில்,  யுனைட்டட் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். சிறப்பாக அட்டாக் செய்த யுனைட்டட் அணி, 5 கோல்கள் அடித்தது. கார்டிஃப் அணிக்கு கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் அந்த அணி, ஒரு ஆறுதல் கோல் மட்டுமே பெற்றது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு, தங்கள் அணி, புதிய உத்வேகத்துடனும், அதிரடியாக அட்டாக் செய்து விளையாடியதும் ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP