புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது உ.பி.யோதா அணி

டெல்லியில் நேற்று நடைபெற்ற 6வது புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 30 -29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உத்தரப் பிரதேச யோதா அணி வெற்றி பெற்று தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 | 

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது உ.பி.யோதா அணி

டெல்லியில் நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் அரியானா அணியை 30 -29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 12 அணிகள் பங்கேற்றுவரும் 6-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது.  டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணியும், உபி யோதா அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்க முதலே யுபி யோதா அணி சில புள்ளிகளில் முன்னிலை வகித்து வந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில், ஆட்டம் முடிவதற்கு முன்னால் இரு அணிகளும் சமனிலை வகித்தன.  இறுதியில், அரியாணா அணியை 30 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP