பாரா ஆசிய போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் வென்று சாதனை!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 | 

பாரா ஆசிய போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் வென்று சாதனை!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

பாரா ஆசிய போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் வென்று சாதனை!

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் 61.33 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், ரிங்கு 60.92 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கlதையும் வென்றுள்ளனர். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் சேர்த்து 9-வது இடத்தில் இருந்து வருகிறது. சீனா 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் என  255 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP