உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஹசாரிக்கா தங்கம் வென்றார்

கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூனியர் ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவு போட்டியில், 16 வயதான ஹரிதாய் 250.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
 | 

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஹசாரிக்கா தங்கம் வென்றார்

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஹசாரிக்கா ஹரிதாய் தங்கப் பதக்கம் வென்றார். 

கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஜூனியர் ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவு போட்டியில், 16 வயதான ஹரிதாய் 250.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஈரானின் அமிர் நெவ்கோணமும் 250.1 புள்ளிகள் எடுத்து, ஹரிதாயுடன் சமநிலையில் இருந்தார். ஆனால் இருவரது முதல் ஷாட்டின் புள்ளிகளை ஒப்பிட்டதில் 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரிதாய், முதலிடம் பிடித்தார். 2ம் இடம் பிடித்து அமிர், வெள்ளிப் பதக்கம் வென்றார். ரஷ்யாவின் ஷாமகோவ் க்ரிகோரி வெண்கலம் பெற்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP