மனைவி பிறந்த நாளில் வெற்றி: நெகிழ்ந்த கோலி

மனைவி பிறந்தநாளில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் முன் 2 புள்ளிகள் பெறுவது மிக முக்கியம் என்றும் விராட் கோலி நேற்றைய வெற்றிக்கு பின் பேசினார்.
 | 

மனைவி பிறந்த நாளில் வெற்றி: நெகிழ்ந்த கோலி

மனைவி பிறந்த நாளில் வெற்றி: நெகிழ்ந்த கோலிமனைவி பிறந்தநாளில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் முன் 2 புள்ளிகள் பெறுவது மிக முக்கியம் என்றும் விராட் கோலி நேற்றைய வெற்றிக்கு பின் பேசினார். 

ஐபில் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ''எங்களுக்கு இந்த வெற்றி தேவைப்பட்டது. தொடரின் முக்கியமான கட்டத்தில் முக்கியமான வெற்றி. கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற முயற்சித்தோம்.  அந்த 2 புள்ளிகள் எங்களுக்கு தேவைப்பட்டது.

கடந்த காலத்தில் பலவற்றை பற்றி நாங்கள் பேசியிருப்போம். பந்துவீச்சாளர்களிடம், தைரியமாக யாக்கர்கள் போடுங்கள் என்றோம். உமேஷ் யாதவின் ஓவர், காலின் பேட்டிங் செய்த அந்த ஓவர், மனன் டுபினி பந்து வீச்சில் குறிவைத்து அடித்து ஆடியது ஆகியவை ஆட்டத்தை மாற்றின. மனன் அவர்களிடம் இருந்து வெற்றியை எங்கள் பக்கம் மாற்றினார்.

நாங்கள் இந்த 2 புள்ளிகளை பெற அழுத்தமான வெற்றியை தர வேண்டும் என்று நினைத்தோம். இந்த நம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும். என்னுடைய மனைவி இங்கு இருக்கிறார். அவருடைய பிறந்த நாள் இன்று.  இது அவருக்கு சின்ன பரிசு. இந்த 2 புள்ளிகளை அவர் முன் வெல்வதை மிக முக்கியமானது என்று கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP