மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!

இதோ வந்துவிட்டது அந்த நாள்.. இன்று தெரிந்துவிடும் ஐபிஎல் 2018 மகுடத்தை சூட போகும் அணி யது என்று.
 | 

மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!

மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!இதோ வந்துவிட்டது அந்த நாள்.. இன்று தெரிந்துவிடும் ஐபிஎல் 2018 மகுடத்தை சூட போகும் அணி யது என்று.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள். ஐபிஎல் 2018ல் இந்த அணிகள் 4வது முறையாக மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையே நடக்கும் பிரமாண்ட யுத்தம்.

சென்னை அணி முதல் குவாலிபையர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கெத்தாக பைனலுக்குள் நுழைந்தது. சென்னையிடம் தோல்வியடைந்த இந்தாண்டின் சிறந்த அணி 2வது எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே முதல் குவாலிபைர் மேட்ச் நடந்து 4 நாட்கள் ஆகின்றது. எனவே இந்த 4 நாட்கள் இடைவேளையில் சென்னை அணி முழுவதுமாக தயாராகி களமிறங்க உள்ளது. லீக் ஆட்டத்தில் இருந்தே சென்னையின் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஒரு வீரரின் ஆட்டம் அந்த அணியை வெற்றியடைய செய்து வருகிறது. முதல் மேட்சில் பிரவோ தொடங்கி வைத்த இந்த சென்ட்டிமெண்ட் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடைசி மேட்ச்சில் டூப்பிளேசிஸ் களத்தில் தனி ஆளாய் நின்று கலக்கினார். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்பிளேசிஸ் தனது அனுபவமிக்க ஆட்டத்தால் சென்னை அணியை கரைசேர்த்தார். அதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி தற்போது பைனலுக்குள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ரஷித் கான். முதல் போட்டியில் இருந்து தனது சுழல் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை வாட்டி வதைத்த ரஷித் கான் கடைசி போட்டியில் பேட்டிங்கிலும் அசத்தினார். இது அந்த அணிக்கு மிக பெரிய பலமாக அமையும்.

சென்னை அணி சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டது. இந்த ஆண்டு அதிகமாக 400 ரன்கள் எடுத்த வீரர்கள் உள்ள அணி சிஎஸ்கே. மேலும் இந்த சீசனில் 2 சதம் அடித்த வீரர்கள் சென்னை வீரர்கள் தான். அதிகம் சிக்சர்களும் சென்னை வசமே. இதுவரை 9 போட்டிகளில் சேசிங் செய்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!பவுளிங்கில் கலக்கி வரும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்தாண்டு 100 விக்கெட்களை எடுத்த ஒரே அணி இது தான். இந்த அணியின் எக்கானமி 7.89ஆக உள்ளது. இந்த அணி முதலில் பேட் செய்து ஜெயிப்பதில் கில்லாடி. முதல் இன்னிங்சில் 100ரன்கள் எடுத்தாலும் எதிர் அணியை சுருட்டி விடக்கூடிய பவுளர்கள் இந்த அணியில் உள்ளனர். 8 முறை முதல் பேட்டிங் செய்த இந்த அணி 5ல் வெற்றிப்பெற்றுள்ளது.

இரண்டு கூல் கேப்டன்களுக்கு இடையேயான போட்டி இது. இதில் எந்த கேப்டனின் யுகம் வெல்கிறது என்பது இன்று தெரிந்துவிடும்.

சென்னை அணியின் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு தான் அந்த அணியின் ரன் மிஷின்கள். இந்தாண்டு இவர்கள் முறையே 438 மற்றும் 586 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

சுரெஷ் ரெய்னாவை பொறுத்தவரை இன்னும் பழைய ரன் ரெயினை அவர் பொழியவில்லை. ஐபிஎல் 2018ன் கடைசி போட்டியிலாவது அது நடக்குமா என்பதை பார்க்கலாம். கடைசியாக, வேற யாரு தல தோனி தான். இந்தாண்டு தோனியின் ரசிகர்கள் மட்டும் அல்ல எதிரணிகளில் இருக்கும் இந்திய வீரர்கள் கூட தோனியின் பேட்டிங்கால் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி வின்டேஜ் தோனியாக அதிரடி காட்டிய போது பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ‘’தோனி சிறப்பாக விளையாடுவதை பார்க்க நல்லா தான் இருக்கு. இது இந்திய அணிக்கு மகிழ்ச்சியளிக்கம் ஒன்று. ஆனால் அவர் எங்கள் அணிக்கு எதிராக ஆடிகிறார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியடைய முடியவில்லை’’ என்றார். அந்த அளவுக்கு இந்தாண்டு ஐபிஎல் கிங் தான் தான் என நிரூபித்துள்ளார் தோனி. இன்றும் அவர் அதிரடி தொடரும், தொடர வேண்டும் என்பதே அனைவரது ஆசை.

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் தவான் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு பாதிப்பை அளிக்க கூடியவர்கள். தற்போது ஆரஞ்ச் தொப்பியை கைவசம் வைத்திருப்பவர் கேன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் பிரத்வெயிட் நின்று சும்மா தட்டி விட்டாலே சிக்சர் பறக்கிறது. கடைசி ஓவர்களில் இவர் களத்தில் எடுக்கும் ரன்கள் அந்த அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரையே மாற்றி விடுகிறது.

பவுளிங்கில் சென்னை சற்று வீக்கான அணியாக இருந்தது. ஆனால் இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் அதையும் சரி செய்துகொண்டு ஆல் ரவுண்டர் அணியாக மாறி உள்ளது. இன்று போட்டி நடக்கும் வான்கடே மைதானத்தை பொறுத்தவரை எல்லா விதமான பவுளர்களுக்கும் சாதகமான பிட்ச்சை கொண்டது. வழக்கம் போல தொடக்க ஓவர்களில் தீபக் சாஹர், லுங்கி நிகிடியும் டெர்த் ஓவர்களில் ஷர்துல் தாகூர், பிரவோ, ஜடேஜாவும் பார்த்துக் கொள்வார்கள்.

ஹைதராபாத்தில் அணியில் ரஷித் கானும், சித்தார்த் கவுலும் வெற்றிகரமான பவுளர்களாக உள்ளனர். இருவரும் 16 போட்டிகளில் விளையாடி தலா 21 விக்கெட் எடுத்துள்ளனர். எனவே இவர்களை சமாளிப்பதே எதிர் அணி பேட்ஸ்மேன்களின் மிக முக்கியமான வேலையாக இருக்கும்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இதுவரை 3 முறை இந்த அணிகள் மோதிக் கொண்டன. அதில் 3லும் சென்னை தான் வெற்றி பெற்றுள்ளது. இது சென்னை அணிக்கு மனதளவில் பெரிய பலமாக இருக்கும். அல்லது 4வது முறையாவது ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் ஹைதராபாத் அதனை மாற்றவும் கூடும்.

மகுடம் சூடும் அணி எது? இன்று மோதுகின்றன சென்னை மற்றும் ஹைதராபாத்!மொத்ததமாக இந்த அணிகள் 9 முறை மோதி உள்ளன. இதில் 7 முறை சென்னை ஜெயித்துள்ளது. கடந்த 10 ஐபிஎல் பைனல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 7 முறை வெற்றிக் கண்டுள்ளது.

இன்று நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 20 கோடி வழங்கப்படும். தோல்வியடைந்து ரன்னர் அப்பாகும் அணிக்கு 12.5 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP