விராட் கோலியை இம்சை செய்யும் அந்த ஒரு விஷயம்

மக்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தொந்தரவாக இருப்பதாக கூறி விராட் கோலி கடுப்பாகியுள்ளார்.
 | 

விராட் கோலியை இம்சை செய்யும் அந்த ஒரு விஷயம்

விராட் கோலியை இம்சை செய்யும் அந்த ஒரு விஷயம்

மக்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தொந்தரவாக இருப்பதாக கூறி விராட் கோலி கடுப்பாகியுள்ளார். 

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா, நான்கு ஆண்டுகள் காதலித்து வந்த காலம் முதல் கல்யாணமாகி முடிந்துவிட்ட நிலையிலும், இவர்களை சுற்றி மக்களின் கண்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது இன்றும் ஓயாத நிலையில், பல விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர். அனுஷ்கா சர்மாவால் தான் விராட், சரியாக சோபிக்க தவறி வருகிறார், இருவரும் விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஏராளமான விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. இருப்பினும் இவர்கள் அமைதி காத்து வருகின்றன. 

பேட்டி ஒன்றில் இது குறித்து விராட் கோலி பேசுகையில், "சில நேரங்களில் மக்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைவது அசௌகரியமாக இருக்கும். இருந்தாலும் அதை எப்படி கையாளுவது என்று கற்றுள்ளேன். பிரபலங்களும் சாதாரண மனிதர்கள் தான். எனவே அவர்களுக்கான இடத்தை மக்கள் கொடுக்க வேண்டும். நான் என்னுடைய கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகலை சமநிலையில் வைத்துள்ளேன். 

விராட் கோலியை இம்சை செய்யும் அந்த ஒரு விஷயம்

என் குடும்பத்துடன் இருக்கும் போது, கிரிக்கெட்டை முழுவதுமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவேன். என்னுடைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவேன். படம் பார்ப்பேன். டிரைவ் செல்வேன். எனது செல்ல பிராணியுடன் நேரம் செலவிட பிடிக்கும். அதே போல், கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் என்னுடைய முழு கவனமும் போட்டி மீது தான் இருக்கும். 

தற்சமயம் நான் இருக்கும் இடம், டெல்லி காலனியில் இருந்து ஆரம்பமானது. வெற்றிக்கான வழி அத்தனை எளிதானதல்ல. அதற்காக நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். கிரிக்கெட் என் வாழ்க்கைக்குள் வந்த நாளில்  இருந்து என்னுடைய முதல் இலக்கு, நாட்டிற்காக விளையாட வேண்டுமென்பதில் தான் இருக்கிறது. அது ஒரு அளவற்ற பெருமை. கிரிக்கெட் பிட்ச்சில் நிற்கும் போது, அரங்கில் ரசிகர்கள் உற்சாகப்படுத்துவதை பார்ப்பதில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பேன்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP