சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

ஐ.பி.எல்-ல் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையின் 8 ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில், 8 முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 | 

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

ஐ.பி.எல்-ல் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. சென்னையின் 8 ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில், 8 முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 6 முறை இறுதிச் சுற்றில் அசத்தியிருக்கிறது. தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளது. அத்துடன் சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது.

இவ்வளவு வெற்றிகளைத் தாண்டி, ஐ.பி.எல்-ல் எல்லோருக்கும் பிடித்த, மிகவும் பிரபலமான அணி என்றால் அது சி.எஸ்.கே தான். சி.எஸ்.கே எந்த அணியுடன் விளையாடுகிறதோ, அந்த அணி ரசிகர்களைத் தவிர்த்து இந்தியா முழுக்க விரும்பப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், தோனியின் கேப்டன்ஷிப்தான்.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

இந்த நிலையில், சூதாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடை பெற்று ஐ.பி.எல் போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருந்தது சென்னை. வனவாசத்துக்குப் பிறகு அதே பழைய உற்சாகத்துடன், ஆரவாரத்துடன் மீண்டும் இந்த சீசனில் களமிறங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது சி.எஸ்.கே. மும்பைக்கு எதிராக அதிரடியான துவக்கத்தை ஆரம்பித்த சி.எஸ்.கே, புனேவில் அந்த அணியுடன் தோல்வியை சந்தித்தது.

ஹைதராபாத், கொல்கத்தாவிடமும் தோல்வி கண்டது. என்ன தான் மிகுந்த வலிமையான அணியாக சி.எஸ்.கே காணப்பட்டாலும், அணியில் இருக்கும் சில குறைகளை சரி செய்தால், இந்த சீசனில் வெற்றி பாதையை நோக்கி சி.எஸ்.கே பயணிக்கும் என்கின்றனர் கிரிக்கெட் ஆலோசகர்கள்.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

ஜடேஜாவுக்கு பதில் மாற்று வீரர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட மூன்று வீரர்களில் ஒருவர் ரவிந்திர ஜடேஜா. அஷ்வின், மெக்கல்லம், பிராவோ ஆகியோர் அடங்கிய பட்டியலில் ஜடேஜாவுக்கு நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. அதற்காக தற்போது அணி நிர்வாகம் வருத்தப்படுகிறது.

இந்த சீசனில் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பி வருகிறார். கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவரது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், பெரியளவில் சோபிக்காத பெங்களூருவுக்கு எதிராக மட்டும் தீயாக செயல்பட்டார் ஜடேஜா.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

வாழ்வா, சாவா என்ற நேரத்தில் ஜடேஜாவால் அத்தனை சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த கட்டத்தில் பிராவோ, லுங்கிசனி ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். மேலும், அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லியும், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படக் கூடியவர் .

வேகப்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கடைசி ஓவர்களில் உத்வேகத்தை இவர் கூட்டுவார். ஜடேஜாவின் இடத்தை வில்லி பிடித்தால், அவரைவிட இவர் சிறப்பாக செயல்பட முடியும். இதையெல்லாம் கருத்தில் கொன்டு ஆடும் லெவனில் தோனி கவனம் செலுத்தும் பட்சத்தில், கடைசி ஓவர்களில் சென்னை அணிக்கு தலைவலி ஏற்படாது.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

ஆடும் லெவன் அணியில் முரளி விஜய்:

டி20 போட்டியில் சிறப்பாக செயல்படும் முரளி விஜய், ஆடும் லெவன் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஐ.பி.எல் வரலாற்றை இரண்டிற்கும் அதிகமான சதங்கள் அடித்த மூன்று இந்திய வீரர்களில் ஒருவர் முரளி விஜய்.

இதுவரை 95 இன்னிங்சில் அவர் விளையாடியுள்ளார். ஆடும் லெவன் அணியில் இவர் சேர்க்கப்பட்டால், அணிக்கு கூடுதல் சிறப்பாக அமையும். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய முரளி விஜய் நல்ல தேர்வாக இருப்பார்.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

பவர்பிளேவில் சுழற்பந்து வீரர்கள்:

டி20 போட்டியில், பவர்பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்களை முதன் முதலில் பயன்படுத்தியவர் தோனி. இப்போது அனைத்து அணிகளும் அதே முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், தற்போது தோனி அதை தவிர்த்து வருகிறார். கண்டிப்பாக இந்த தருணத்தில் பஞ்சாப் கேப்டன் அஷ்வின், சி.எஸ்.கே அணியின் மிகப்பெரிய இழப்பாக இருப்பார்.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

ஏனெனில், பவர்பிளேவில் ஜடேஜா மற்றும் கார்ன் சர்மா மீது அவர் அத்தனை நம்பிக்கையுடன் இல்லை. ஹர்பஜன் சிங்கை அவர் பவர்பிளேவில் களமிறக்கினாலும், கலவையான முடிவுகளே கிடைத்துள்ளன.

இதனால் பவர்பிளேவில் கூடுதல் கவனம் செய்ய தோனி, ஹர்பஜனை ஊக்குவிப்பதுடன், பவர்பிளேவுக்கு முன்னரே அதிக விக்கெட்கள் எடுக்க வைப்பதன் யுத்தியை செயல்படுத்துவதும், சென்னை அணியின் வெற்றி பாதைக்கு குறுக்கே வரும் தடங்கலுக்கு பலம் சேர்க்கும்.

சி.எஸ்.கே-வின் வெற்றி தொடர இந்த மாற்றங்கள் அவசியம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP