சென்னைக்கும் ரஷித் கானுக்குமான போட்டி இது: சங்ககாரா

ஐபிஎல் 2018 சென்னைக்கு ரஷித்கானுக்கு இடையே நடக்கும் போட்டி என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
 | 

சென்னைக்கும் ரஷித் கானுக்குமான போட்டி இது: சங்ககாரா

சென்னைக்கும் ரஷித் கானுக்குமான போட்டி இது: சங்ககாராஐபிஎல் 2018 சென்னைக்கு ரஷித்கானுக்கு இடையே நடக்கும் போட்டி என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார். 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட சென்னை அணியும் சிறந்த பவுளர்களை கொண்ட ஹைதராபாத் அணியும் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

இந்நிலையில் இன்றைய போட்டி சென்னை பேட்ஸ்மேன்களுக்கும், ஹைதராபாத்தின் ரஷித் கானுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறிய போது, ''சென்னை அணி வீரர்களை ஏலத்தில் எடுக்கும் போது வைத்திருந்த அத்தனை திட்டங்களையும் மிக சரியாக அந்த அணி செயல்படுத்தி வருவது. ஒவ்வொரு வீரரின் திறமையையும் அந்த அணி அழகாக பயன்படுத்தி வருகிறது. சென்னை முழு நம்பிக்கையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னர் கிடைத்த 4 நாட்கள் அந்த அணிக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

3 முறை ஹைதராபாத்தை வீழ்த்தி உள்ள சென்னை அணி இன்று அதையே செய்ய முற்படும். என்னை பொறுத்தவரை இன்றைய போட்டி சென்னை பேட்ஸ்மேன்களுக்கும், ரஷத் கானுக்கு இடையே நடக்கும் போட்டியாக தான் பார்க்கிறேன். ரஷித் கானால் தான் சென்னை அயி அம்பத்தி ராயுடுவை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறது. அப்போது தான் ரஷித்தின் ஓவரை அவர் ரெய்னாவுடன் சேர்ந்து சமாளிக்க முடியும். போட்டியின் தொடக்கத்தில் ரஷித்தின் ஓவர்களை சென்னை எப்படி சமாளிக்கிறது என்பதை பொறுத்தே இன்றைய முடிவு அமையும்'' என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP