கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய என்னை அணியில் சேர்க்கவில்லை- கம்பிர்

ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தன்னை அணி நிர்வாகம், ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்று கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கவுதம் கம்பிர் இந்த ஆண்டு வாங்கப்பட்டார். டேர்டெவில்ஸ் கேப்டனாக இருந்து, தனது சொந்த ஊர் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்கும் கனவோடு கம்பிர் களமிறங்கினார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. துவக்கத்தில் சுமார் ஐந்து போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தினார் கம்பிர். இதில் ஓரிரு போட்டிகளை மட்டுமே அணிக்காக கம்பிர் வென்று கொடுத்தார். தொடர் தோல்விகளை பெற்று கொடுத்ததால், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பிர் அறிவித்தார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டது. 

இந்த நிலையில், கேப்டனாக விலகியதை அடுத்து ஆடும் லெவன் அணியில் ஏன் கம்பிர் இடம் பெறவில்லை என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கம்பிர், "இந்த கேள்விக்கு என்னிடம் பதில் ஒன்றே ஒன்று தான். என்னை அணியில் சேர்க்கப்படவில்லை. அணியில் சேர்த்தால் தான் ஆட முடியும். 

அணியில் முக்கியமான வீரர்களான ரபாடா, மோரிஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், முக்கிய கட்டத்தில் சோபிக்க தவறினோம். போட்டியின் அழுத்தத்தில் பெரியளவில் நாங்கள் ஆடவில்லை. இவையெல்லாம் அணிக்கு பலவீனமாக இருந்தது. இதனால் தான் பல போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். 

மேலும், நான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், டெல்லி தேர்தலில் நிற்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் உண்மையில்லை. நான் இன்னும் எனது அணிக்காக விளையாடி, பல வெற்றிகளை பெற இருக்கிறேன்" என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP