ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

2018 ஏப்ரல் மாதம் ஆரம்பமான 11-வது ஐ.பி.எல் போட்டி முக்கிய கட்டத்தை நெருங்க இருக்கிறது. அதற்குள்ளாகவே பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு, புதிய சாதனைகளும் படைக்கப்பட்டுவிட்டன.
 | 

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

முக்கிய கட்டத்தை நெருங்கி உள்ள 2018 ஐ.பி.எல்-ல், நம்மை பல விஷயங்கள் கவர்ந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெரும் சி.எஸ்.கே, சிக்ஸர் மழை பொழியும் கிறிஸ் கெய்ல், பந்துவீச்சில் விதவிதமாக விரைட்டி காட்டும் பந்துவீச்சாளர்கள் என சில அதிரடி ஆட்டங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

இதில் சில சொதப்பலான ஆட்டங்களையும் நாம் பார்த்ததுண்டு. ஆனால், நாம் கவனிக்க மறந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் ஐ.பி.எல் போட்டியில் நடந்துள்ளன. அப்படியான ஒரு ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள் பின் வருமாறு...

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

இறுதிச் சுற்று- சேசிங்கில் லக்கியான வீரர்:

கடந்த 10 ஆண்டு ஐ.பி.எல் போட்டியில், இறுதிச் சுற்றில் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்த அணிகளே பெரும்பாலும் வெற்றியை ருசித்துள்ளது. மொத்தம் 7 இறுதிப் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை இறுதிச் சுற்று ஆட்டங்களில் சேசிங் செய்த அணிகள் வெற்றியை கண்டுள்ளன. இந்த சேசிங் வெற்றிக்கும், யூசப் பதானுக்கும் இடையே ஒரு ஒற்றுமை அமைந்திருக்கிறது.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

2008ம் ஆண்டு இறுதிப் போட்டியில், யூசப் பதான், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 22 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றிய அவர், 56 ரன்களும் விளாசி இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 164 ரன் இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தலாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. யூசப் பதானுக்கு ஆட்ட-நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

2012ம் ஆண்டு, கொல்கத்தா அணிக்காக அவர் சிறப்பாக விளையாடவில்லை. 17 ரன் கொடுத்து வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சென்னை நிர்ணயித்த 190 ரன் இலக்கை கொல்கத்தா எட்டி, கோப்பையை வென்றது. 2014ம் ஆண்டு மீண்டும் கொல்கத்தா அணிக்காக யூசப் விளையாடினார். பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடியது. மனிஷ் பாண்டேவுடன் இணைந்து விளையாடி யூசப், பார்ட்னர்ஷிப்பில் 71 ரன் சேர்த்து, 200 ரன் இலக்கை அடைந்தார்.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

அதிக போட்டிகளை சந்தித்த பிரபலமில்லாதவர்:

உள்ளூர் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஒரு பெரிய வாய்ப்பாகவே ஐ.பி.எல் பார்க்கப்படுகிறது. இதுவரை பல திறமையான வீரர்கள் இப்போட்டியில் இருந்து தேசிய அணிக்காக தேர்வாகியுள்ளனர். இதில் அதிக திறமைகளை ஆட்கொண்டிருந்தாலும், தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை சில வீரர்கள் பெற்றதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

அப்படியான ஒருவர் தான் ராஜத் பாட்டியா. இந்த பிரபலமில்லாத திறமைமிக்க வீரர், இதுவரை நடந்த 10 சீசன்களில், 95 முறை நம் முன் வந்து சென்றிருக்கிறார். டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள ராஜத், 71 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவருடைய எக்கனாமி ரேட் 7.40.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

10 ஆண்டுகள் ஒரே அணியில் இடம்பெற்ற வீரர்கள்:

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அணிகளுக்கான ஏலம் நடக்கும். அதில், ஒரு அணியில் இருந்து வீரர்கள் மற்றொரு அணிக்கு இடம் மாறுவது என்பது சகஜம். இதில், பல முறை ஒன்றாக செயல்பட்ட வீரர்கள் பிரியும் சம்பவங்கள் ஏறலாம். ஆனால், இதிலும் ஒரு விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 10 சீசன்களில், ராபின் உத்தப்பா மற்றும் மனிஷ் பாண்டே, ஒரு அணியில் இருந்து பிரிக்க முடியாத வீரர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இந்த 11-வது சீசனில் இவ்விரு வீரர்களும் பிரிந்தது துரஷ்டமே. உத்தப்பா-பாண்டே இணை, 10 ஆண்டுகளில் நான்கு அணிகளில் ஒன்றாக இருந்துள்ளனர்.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

2008ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி தொடங்கியபோது, இவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அடுத்த ஆண்டு ஆர்.சி.பி அணி வாங்கியது. 2010 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினர்.

இப்படி ஆர்.சி.பி-க்காக விளையாடியபோதுதான், 2009ம் ஆண்டு, ஐ.பி.எல்-ல் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பாண்டே பெற்றார். 2011ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினர். 2013ம் ஆண்டு வரை இந்த இணை இணைந்திருந்தது.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

அதன் பிறகு, 2014ம் ஆண்டு இந்த இணையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சொந்தமாக்கியது. அந்த ஆண்டு, கொல்கத்தா அணி ஐ.பி.எல் சாம்பியன் என்ற மகுடம் சூட முக்கிய புள்ளியாக இருந்தது இந்த ஜோடி. இதில், உத்தப்பா அதிக ரன் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தட்டிச் செல்ல, பாண்டே ஆட்ட-நாயகன் விருதை பெற்றார்.

இப்படி இணை பிரியாமல் இருந்த ஜோடியை இந்த ஆண்டு பிரித்துவிட்டனர். இந்த சீசனில் பாண்டே - ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். கொல்கத்தா அணி, உத்தப்பாவை ரைட் டி மேட்ச் முறையை பயன்படுத்தி தக்கவைத்துக் கொண்டது.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

ஃபைனலில் தோற்றும் ஆட்ட-நாயகனான ஒரே வீரர்:

எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், மிகச் சிறப்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகும் வெற்றிபெறவில்லை என்றால் அது மிகவும் சோகமானதாகத்தான் இருக்கும். அதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல. அதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தோல்வி அடைந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிவது எவ்வளவு ஒரு சிறப்பான விஷயம். அப்படி ஒரு நிகழ்வு ஒரே ஒரு முறைதான் நடந்துள்ளது.

இதுவரை 10 சீசன்கள் முடிந்துள்ள ஐ.பி.எல் போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில் தான், தோல்வி அடைந்த அணியின் வீரருக்கு ஆட்ட-நாயகன் விருது கிடைத்துள்ளது. அது எப்போது தெரியுமா?

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. முதலிட டெக்கான் சார்ஜர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்.சி.பி-யின் சூழல்பந்து வீரர் அனில் கும்ப்ளே அடக்கினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 16 ரன் கொடுத்து 4 விக்கெட்களை அள்ளினார். இப்படி பந்துவீச்சில் அசத்தினாலும், பேட்டிங்கில் பெங்களூரு அணி சொதப்பியது. 9 விக்கெட் இழந்த பெங்களூரு 137 ரன் தான் எடுத்தது.

பெங்களூரு அணி தோல்வியைத் தழுவினாலும், மிகச்சிறப்பான முறையில் பந்து வீசியதற்காக அனில் கும்ப்ளேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. சோகத்திலும் ஒரு சின்ன சந்தோஷம்...

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

இந்த வீரருக்கு பின் கொல்கத்தா சதம் கண்டதில்லை:

டி20 போட்டியில் சதமடிப்பது என்பது அத்தனை எளிதில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை. இருப்பினும், 20 ஓவர் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தவர்களும் இருக்கின்றனர். 2008ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம், பெங்களூரு அணியை கதறவிட்டார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 158 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்ற அவரை பார்த்து கலங்கி தான் போயினர் பெங்களூரு வீரர்கள். அன்று முதல் இன்று வரை ஐ.பி.எல் போட்டிகள் 49 சதங்களை பார்த்துள்ளது.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

கிறிஸ் கெய்ல், ஆறு சதங்களுடன் பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறார். 12 சதங்களுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அணிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆனால், ஐ.பி.எல்-ல் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணி, இந்த பட்டியலில் ஒரே ஒரு சதத்துடன் தான் உள்ளது. மெக்கலத்திற்குப் பிறகு சதத்தையே கண்டதில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

மெக்கல்லதிற்கு பிறகு ஒரு கொல்கத்தா 156 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், எந்த ஒரு வீரரும் சதத்தை அடிக்கவில்லை என்பதுதான் வேதனை. ஆறு முறை 90-க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. 2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக மனிஷ் பாண்டே 94 ரன்கள் அடித்திருந்ததே, அந்த அணியின் இரண்டாவது பெரிய ஸ்கோராகும்.

ஐ.பி.எல்-ன் விநோதமான சாதனைகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP