ஊக்க மருந்து சர்ச்சை: 28 ரஷ்ய வீரர்களின் தடை நீக்கம்

ஊக்கமருந்து சர்ச்சை: 28 ரஷ்ய வீரர்களின் தடை நீக்கம்
 | 

ஊக்க மருந்து சர்ச்சை: 28 ரஷ்ய வீரர்களின் தடை நீக்கம்

ஊக்க மருந்து சர்ச்சை: 28 ரஷ்ய வீரர்களின் தடை நீக்கம்

ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக 28 ரஷ்ய தடகள வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த 28 பேர் மீதான ஆதாரம் போதுமானதாக இல்லை என்று கூறிய தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லையே தவிர, அவர்கள் குற்றமற்றவர்களாக கருதப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு சொச்சியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தடை செய்திருந்த ஊக்க மருந்தை வீரர்கள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தடை நீக்கத்தால், இவர்கள் பிப்ரவரி 9ம் தேதி தொடங்க இருக்கும் பியெவ்ங்சாங் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவர்களில் எத்தனை பேர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. மேலும், ஊக்க மருந்து சர்ச்சையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 11 பேர் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிமன்றம் நிராகரித்தது. 

முன்னதாக, பியெவ்ங்சாங் போட்டியில் கலந்துகொள்ள 169 ரஷ்ய வீரர்- வீராங்கனைகளை ஒலிம்பிக் கமிட்டி, நடுநிலை கொடியின் கீழ் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP