விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்
 | 

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

கடந்த செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறந்த பிறகு மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பியதாக, முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பரில் செரினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகளும், அவசர சிகிச்சைகளும் தொடர்ச்சியாக ஆறு வார காலம் மேற்கோள்ளப்பட்டது. அந்த அனுபவத்தை சி.என்.என். ஊடகத்தில் பத்தியாக எழுதியுள்ள செரினா வில்லியம்ஸ், தாம் மரணத்தின் விளிம்புக்குச் சென்று வந்ததாகக் குறிப்பிட்டதுடன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவுக்கு நன்றி பாராட்டியுள்ளார்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

இந்திய அணி வீரரும், ஆல்ரவுண்டருமான இர்பான் பதான் 'இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேட்டார். அதற்கு பல்வேறு பதில்கள் கொட்டப்பட்டன. அதில், 'இந்திய அணியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, கேப்டன் விராட் கோலி ஆகியோரின் தலைமைதான்' என்று பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

டோக்கியோவில் நடைபெறும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "கடந்த முறை பெற்ற வெள்ளிப் பதக்கத்தின் நிறத்தை வரும் ஒலிம்பிக்கில் தங்கமாக மாற்ற விருப்பம் உள்ளது. நான் எனது கனவைத் துரத்துகிறேன். நிச்சயம் அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான லெக் ஸ்பின் 'லெஜண்ட் அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார். 24 வயதான இவரும் லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் சீருடை போல் அணிந்திருந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவும் அரசியல், மலிந்துள்ள ஊழல் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார். இதன் எதிரொலியாக, பாகிஸ்தான் ரசிகர்கள் உஸ்மான் காதிரை துரோகி என சாடி வருகின்றனர்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், 'தமிழகத்தில் இருந்து மற்றொரு சூப்பர்ஸ்டார் நடிகர் இன்று மாலை தனது அரசியல் பயணத்தைத் துவங்குகிறார். அரசியல் களம் மகத்தான மாற்றத்துக்குத் தயாராகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளைக் கடந்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் தற்போது 909 புள்ளிகளைப் பெற்றுள்ள கோலி, கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் ஒரேநேரத்தில் 900 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை புரிந்த முதல் வீரர் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் என்பது நினைவுகூரத்தக்கது.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி புதன்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க வெற்றிக்குப் போராடும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் களமிறங்குகின்றன. இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயதேவ் உனத்கட் மற்றும் ஷர்துல் தாக்குர். தென் ஆப்பிரிக்கா: ஜேபி டுமினி (கேப்டன்), பர்ஹான் பெகார்தின், ஜூனியர் டலா, ஏபி டி வில்லியர்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜான்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பாட்டர்சன், பாங்கிசோ, பெலுக்வயோ, ஷம்சி மற்றும் ஜான் ஸ்மட்ஸ்.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவுக்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு | பிப்.21, 2018 - செய்தித் தெறிப்புகள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP