பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் முடிந்தது சாஹாவின் அறுவை சிகிச்சை

பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹாவுக்கு, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
 | 

பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் முடிந்தது சாஹாவின் அறுவை சிகிச்சை

இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹாவுக்கு, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹா இடம் பெறவில்லை. இதற்கு முன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியில் இருந்தும் சாஹா விலகி இருந்தார். 

ஐ.பி.எல் போட்டியின் போது, கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் தான், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, சிகிச்சையில் இருந்த அவருக்கு தோள்பட்டையில் தீவிர காயம் என்று தெரியவந்தது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டியில், கேட்ச் பிடித்த சமயத்தில் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயம் நாளடைவில் தீவிரமாக மாறியதால், தற்போது நீண்ட நாட்களுக்கு இந்திய அணியில், இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை சாஹாவுக்கு உருவாகியுள்ளது. 

 

 

இந்த நிலையில், மான்செஸ்டரில் நேற்று சாஹாவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிகிச்சை, பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் நடந்தது. இது பற்றி பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சாஹா ஓய்வில் இருந்து வருகிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP