கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

இந்தியாவில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைப்பது கிரிக்கெட் மட்டும் தான். அந்த கிரிக்கெட்டை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போன பெருமை சச்சின் டெண்டுல்கரையே சாரும். சச்சின் அவுட் ஆகிவிட்டால் டி.வியை அணைப்பதும், அவர் பூஸ்ட் விளம்பரத்தில் வந்ததற்காகவே அதை வாங்கிக் குடித்தவர்களும் இங்கு ஏராளம். தன்னை ஒரு விளையாட்டு வீரராகப் பார்க்காமல் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்திருக்கிறார் சச்சின். அவர் சொன்ன சில வார்த்தைகளைப் பார்ப்போம். இந்தியாவில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், எல்லோ
 | 

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

இந்தியாவில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைப்பது கிரிக்கெட் மட்டும் தான். அந்த கிரிக்கெட்டை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போன பெருமை சச்சின் டெண்டுல்கரையே சேரும். சச்சின் அவுட் ஆகிவிட்டால் டி.வியை அணைப்பதும், அவர் பூஸ்ட் விளம்பரத்தில் வந்ததற்காகவே அதை வாங்கிக் குடித்தவர்களும் இங்கு ஏராளம். தன்னை ஒரு விளையாட்டு வீரராகப் பார்க்காமல் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்திருக்கிறார் சச்சின். அவர் சொன்ன சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

கிரிக்கெட் எனது முதல் காதல். மைதானத்துக்குள் நுழைந்ததும் போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற பசி எப்போதுமே உடன் இருக்கும்.

6 மணி நேரத்தை முழு மூச்சுடன் கிரிக்கெட் மைதானத்திற்குக் கொடுக்க வேண்டும், அதன் முடிவு எதுவென்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

என்னை வேறு யாருடனும் நான் ஒப்பிட்டுக் கொள்ள முயன்றதில்லை.

ஒப்பிடுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை. அது கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, பயிற்றுவிப்பாளர்களாக இருந்தாலும் சரி.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

என் மனதிற்குள் இருந்த ஒரு விஷயம், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது தான். நிச்சயமாக ஒருநாள் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியும்.

இந்தியாவுக்காக விளையாடும் கனவு எனக்கு எப்போதுமே இருந்தது. ஆனால் என்மேல் அழுத்தம் அதிகரிக்க நான் ஒருபோதும் விடவில்லை.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

பாகிஸ்தானை வெற்றிக் கொள்வதென்பது எப்போதுமே ஸ்பெஷல். ஏனென்றால் அவர்களின் குழு சற்று கடினமானது. அதோடு நமக்கும் அவர்களுக்கும் நிறைய வரலாறு இருக்கிறது.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

எதையும் தொடர்ந்து யோசிக்க மாட்டேன். அந்த நேரத்தில் எது தேவையோ அதை செய்து விடுவேன்.

வருகிற பந்தில் அடித்தால் நன்றாகப் போகும் என தோன்றும் பந்துகளை மட்டும் அடிப்பேன். இதை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்வேன்.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

விமர்சகர்கள் எனக்குக் கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கவில்லை. தவிர எனது உடலும், மனமும் என்ன நினைக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

மக்கள் உங்களை நோக்கி கற்களை வீசும் போது அதை மைல்கல்லாக மாற்றுங்கள்.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

கனவுகளை துரத்துங்கள், ஒரு நாள் உங்கள் கனவு நனவாகும்.

கனவுகளை துரத்துங்கள் - சச்சின் உதிர்த்த நாமும் பின்பற்ற வேண்டிய பொன்மொழிகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP