புனேவிலும் சென்னை அணி விளையாடுவதில் சிக்கல்

புனேவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்திற்கான நீரை எப்படி பெறுவீர்கள் என்பதை விளக்க வேண்டும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
 | 

புனேவிலும் சென்னை அணி விளையாடுவதில் சிக்கல்

புனேவிலும் சென்னை அணி விளையாடுவதில் சிக்கல்புனேவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்திற்கான நீரை எப்படி பெறுவீர்கள் என்பதை விளக்க வேண்டும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற கூடாது என்று கூறி பல தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடைசியாக சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது மைதானத்திற்குள் செருப்புகள் வீசப்பட்டன. மேலும் சிலர் மைதானத்திற்குள் கோஷங்களை எழுப்ப தொடங்கினர். 

இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக சென்னையில் அடுத்து நடைபெற இருந்த 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம், பி.சி.சி.ஐ உடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிவித்தது. அதன்படி புனேவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்றனர். 

மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திடன் மைதானத்திற்கு தேவையான நீரை எப்படி பெறுவீர்கள் என்று மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் புனேவில் சென்னை அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்படடுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP