மகாராஷ்டிரா மைதான பராமரிப்பாளராக மீண்டும் பாண்டுரங் சல்கோன்கர்

மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக மீண்டும் பாண்டுரங் சல்கோன்கர்(68) களமிறக்கப்பட உள்ளார்.
 | 

கடந்த அக்டோபர் மாதம் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் பராமரிப்பாளராக சல்கோன்கர் இருந்து வந்தார். இதற்கிடையே போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட சூதாட்ட தரகர்கள் என்று கூறிய செய்தியாளர்களை மைதானத்தை ஆய்வு செய்ய அனுமதித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் என்று தெரியாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சல்கோன்கர் சர்ச்சையான பதில்களை கூறினார். 

இது ஒரு வீடியோ மூலம் தெரியவந்ததை அடுத்து, விதிமுறையை மீறிய சல்கோன்கரை பிசிசிஐ ஆறு மாதம் தடை செய்தது. இந்த தடை இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில், வருகிற 25ம் தேதி மீண்டும் பராமரிப்பாளர் பொறுப்பை சல்கோன்கர் ஏற்க இருக்கிறார். 

சல்கோன்கர், 1971 முதல் 1982 வரை மகாராஷ்டிரா அணிக்காக 63 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். மகாராஷ்டிரா முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை நடத்திய போது பராமரிப்பாளராக சல்கோன்கர் இருந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP