தேசிய பெண்கள் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்

தேசிய பெண்கள் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்
 | 

தேசிய பெண்கள் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு சரிதா, சோனியா முன்னேற்றம்


ஹரியானாவின் ரோஹ்டக் நகரத்தில் தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகளான சரிதா தேவி, சோனியா லெதர் முன்னேறினர்.

60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சரிதா தேவி, காலிறுதியில் அருணாச்சல பிரதேச வீராங்கனை அகுயில்ல துபாக்கை வீழ்த்திய அறியிருத்திக்குள் நுழைந்தார். 57 கிலோ எடைப் பிரிவில் சோனியா, உத்தர்காண்டின் கம்லா பிஷ்த்தை தோற்கடித்தார். 

இவர்களை தவிர, முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான நிகான்ட் சரீன் (51 கிலோ), பவித்ரா (60 கிலோ), முன்னாள் உலக சாம்பியன்ஷிப் வெள்ளி பதக்க வீராங்கனை சார்ஜுபாலா தேவி (61 கிலோ) ஆகியோரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP