வெற்றியை விட பாடம் முக்கியம்: தோனி

ஒரு போட்டியில் வெல்வதை விட அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பது தான் முக்கியம் என்று தோனி கூறினார்.
 | 

வெற்றியை விட பாடம் முக்கியம்: தோனி

வெற்றியை விட பாடம் முக்கியம்: தோனிஒரு போட்டியில் வெல்வதை விட அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பது தான் முக்கியம் என்று தோனி கூறினார். 

மும்பையில் நேற்று நடந்த முதல் பிளேஆப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றிக்கு பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ''போட்டியில் எங்கள் அணி ஜெயிக்கும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும். எப்படி ஜெயித்தோம் என்பது மிகவும் முக்கியம்.

டாப் 2 இடங்களில் இருக்கும் போது அடுத்து இன்னோரு வாய்ப்பு இருக்கும். இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த போட்டி என்ற சாதகமான நிலை இருக்கும்.

ஹைதராபாத் அணியினர் சிறப்பாக  பந்துவீசினர். குறிப்பாக புவனேஷ்வர் குமாரும் ரஷித் கானும் சிறப்பாக பந்து வீசினர். நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்துகொண்டே இருந்தோம். அதனால் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆட்டத்தில் மிட் ஓவர்களில் 4-5 விக்கெட்கள் பறிபோனது எங்கள் அணி மீது அழுத்தத்தை சேர்த்தது. நிச்சயமாக அவர்களின் பந்துவீச்சாளர்கள் ஆச்சர்யமளித்தனர். இது போன்ற போட்டிகளில் ஜெயிப்பது நல்ல விஷயம்.

அதை விட இது போன்ற போட்டியில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். தொடர்ந்து தவறுகளை சரி செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு போட்டிகளாக எங்களின் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது . தொடக்கம் முதலே யார் எப்போது பந்து வீச வேண்டும் என்பதை மாற்றி கொண்டே இருந்தோம். அவ்வாறு செய்யும் போது யார் எந்த இடத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை அறிய முடியும்.

என்னிடம் உள்ளவர்களை வைத்துதான் நான் அணியில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த மாற்றத்தை என்னால் செய்ய முடியாது என்று விலகி செல்ல முடியாது. இவ்வாறு செய்யும் போது சில இடங்களில் அது தவறாக கூட முடியலாம். அதற்காக நிறுத்தி விட முடியாது. இவர்கள் தான் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர். அவர்களின் சரியான இடம் எது என்ஞ தெரிந்த கொள்வது மிகவும் அவசியம்.

தொடர்ந்து 7 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் சென்றதற்கு காரணம் எங்கள் அணியின் ஒற்றுமை. இங்கு சீனியர் வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கும். அணி நிர்வாகமும் இதில் பெரிய பங்கு வகிக்கின்றனர்.

சில வீரர்கள் புதிதாக அணிக்கு வந்த போது சென்னை அணியின் செல்பாடகளை அந்நியமாக கருதினர். ஆனால் அதன் பின் அவர்களும் இதனை மகிழ்ச்சியாக பழகி கொண்டனர். அது தான் நாங்கள் சிறந்த அணியாக இருப்பதற்கு காரணம்''  என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP