ஐ.பி.எல்: பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் சௌதீக்கு கண்டனம்

பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீக்கு ஐ.பி.எல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

ஐ.பி.எல்: பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் சௌதீக்கு கண்டனம்

ஐ.பி.எல்: பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் சௌதீக்கு கண்டனம்

பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீக்கு ஐ.பி.எல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியின் போது பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெவல் 1 குற்றம் என்பதால் சௌதீக்கு கண்டனம் மட்டும் தெரிவித்துள்ளது ஐ.பி.எல். 

ரன் சேசிங்கில் ஈடுபட்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக சௌதீ அபாரமாக பந்துவீசினார். போட்டியின் போது, ஹைதராபாத் அணியின் ஹேல்ஸ் எதிர்கொண்ட பந்து பவுண்டரிக்கு வெளியே துரத்தப்பட்டது. அப்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த சௌதீ, அந்த பந்தை பிடித்தார். ஆனால், பந்து தரையில் பட்டதாக கூறி, அவுட் கொடுக்க நடுவர்கள் மறுத்தனர். இதனால் கேப்டன் விராட் கோலி அம்பயரிடம் அவரது முடிவு குறித்து விவாதித்தார். 

தன் பின், பெங்களூரு ரிவியூ கேட்டது. இந்த முடிவில் மூன்றாவது அம்பயரும் அவுட் தரவில்லை. மூன்றாவது நடுவரின் முடிவுக்கு சௌதீ எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்ததால், அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த லெவல் 1 குற்றத்தை சௌதீயும் ஏற்றுக் கொண்டார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP