சர்வதேச துப்பாக்கி சுடு போட்டி: மனு பாக்கர் - அன்மோல் ஜெயின் தங்கம் வென்றனர்

சர்வதேச துப்பாக்கி சுடு போட்டியில் இந்திய வீரர்கள் மனு பாக்கர் - அன்மோல் ஜெயின் தங்கப்பதக்கம் வென்றனர்.
 | 

சர்வதேச துப்பாக்கி சுடு போட்டி: மனு பாக்கர் - அன்மோல் ஜெயின் தங்கம் வென்றனர்

சர்வதேச துப்பாக்கி சுடு போட்டியில் இந்திய வீரர்கள் மனு பாக்கர் - அன்மோல் ஜெயின் தங்கப்பதக்கம் வென்றனர். 

செக் குடியரசின் பில்சேன் நகரில், 28-வது மீட்டிங் ஆஃப் ஷூட்டிங் ஹோப்ஸ் என்னும் சர்வதேச துப்பாக்கி சுடு போட்டி நடைபெற்றது. இதில் நேற்று, இந்தியாவின் மனு பாக்கர் - அன்மோல் ஜெயின், 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் போட்டியிட்டனர். இருவரும் இணைந்து 476.9 புள்ளிகள் பெற்று, தங்கப்பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய இணையான தேவன்ஷி ராணா - சௌரப் சவுதிரி 1.2 புள்ளி வித்தியாசத்தால், 2ம் இடம் பிடித்தது. 

10மீ ஏர் ரைஃபிள் கலப்பு குழு பிரிவில், இந்திய அணியான ஸ்ரேயா அக்ராவால் - ஹரிதாய் ஹசாரிக்கா  (496.5) வெள்ளிப் பதக்கமும், இளவேனில் வாலறிவன் - திவ்யான்ஷ் சிங் பன்வார் (433.9) வெண்கலப் பதக்கமும் வென்றன. இத்தாலி இணை 497.0 புள்ளி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 

இந்தியா, 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கத்துடன் இத்தொடரை முடித்தது. இப்போட்டியில் மனு பாக்கர், 4 தங்கப் பதக்கம் வென்றார். 

50மீ ஆடவர் ஜூனியர் பிஸ்டல் பிரிவில், அர்ஜுன் சிங் (563), அன்மோல் (554), விஜயவீர் சித்து (553) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP