ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங் அணியுடன் மோதிய ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முடிவில் 68 பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
 | 

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி  பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் ஸ்குவாஷ் பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. ஹாங்காங் அணியுடன் மோதிய ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இதில் தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP