இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 

அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி 72 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது. 

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

இந்திய அணியின் இந்த சாதனைக்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP