கோலியின் யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை முறியடித்த ஹாக்கி கேப்டன்

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை, முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் முறியடித்துள்ளார்.
 | 

கோலியின் யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை முறியடித்த ஹாக்கி கேப்டன்

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை, முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் முறியடித்துள்ளார்.

யோ-யோ டெஸ்டில் வீரர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற முடியும் என்பது கட்டாயமாகும். யோ-யோ டெஸ்டில் குறைந்தபட்ச மதிப்பெண் 16.1 ஆகும். ஆனால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அண்மையில் 19 மதிப்பெண் எடுத்து முன்னிலை பெற்றார். தற்போது இதனை முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் முறியடித்து இருக்கிறார். 

இந்தோனேசியாவில் ஆசிய போட்டிகள் நாளை (18ம் தேதி) முதல் துவங்க உள்ளது. சிங், முன்னர் இருந்த பயிற்சியாளரால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதன் பிறகு அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய பயிற்சியாளர் ஹரேந்தர் சிங்கால் மீண்டும் அணியில் சர்தார் சிங் இடம் பெற்றார். 

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிங், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக, பெரும் சர்ச்சைக்குள்ளான யோ-யோ டெஸ்டிலும் தேர்ச்சி அடைந்தார். யோ-யோ டெஸ்டில் அவருடைய மதிப்பெண் 21.4 ஆகும். சர்தார் சிங்கின் சிறந்த உடற்தகுதி, இந்திய அணிக்காக பல கோல்களை பெற்று தரும் என்றும் இந்திய அணி பதக்கம் வெல்லும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP