இந்து - முஸ்லீம் விளையாட்டு - ஹர்பஜன் கலாய்

குறைந்த மக்களவை கொண்ட குரேஷியா உலக கோப்பை பைனலில் விளையாடிகிறது. ஆனால் 135 கோடி மக்களை கொண்ட இந்தியா இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 | 

இந்து - முஸ்லீம் விளையாட்டு - ஹர்பஜன் கலாய்

குறைந்த மக்களவை கொண்ட குரேஷியா உலக கோப்பை பைனலில் விளையாடிகிறது. ஆனால் 135 கோடி மக்களை கொண்ட இந்தியா இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஞாயிறு அன்று முடிவடைந்தது. 32 அணிகள் பங்கேற்ற பிஃபா தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. முதல்முறையாக, இறுதி போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் போன்ற பெரிய அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. நேற்று மாஸ்கோவில் நடைப்பெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. குறைந்த மக்கள்தொகை கொண்ட குரேஷியா இறுதி சுற்றுவரை சென்று சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் ஃபிஃபா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங்,  ‘50 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிக சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள்தொகை கொண்ட நாம் இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடுகிறோம். இந்து- முஸ்லீம் விளையாட்டை விளையாடுவதை நிறுத்திவிட்டு, குரோஷியா அணியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP