யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடிய போதும் மும்பை அணி தோல்வி அடைந்ததது.
 | 

யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா

யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்ட்யாபெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டிய போதும் மும்பை தோல்வி கண்டது துரதிஷ்டமே. 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது, ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா அந்த ஓவரின் முதல் பந்தில் மந்தீப்பின் விக்கெட்டை  வீழ்த்தினார். அடுத்த பந்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார். அதோடு நிறுத்திவிடாமல் அந்த ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

அடுத்ததாக மும்பை அணி பேட்டிங் செய்த போது, நிலைத்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இப்படி பேட்டிங்களும், பந்துவீச்சிலும்  சிறப்பாக செயல்பட்டும் மும்பை அணி வெற்றிப்பெறவில்லை. 

போட்டி ஒன்றில், ஒரு வீரர் 3 விக்கெட்களும், அரைசதம் அடித்தும் ஒரு அணி தோல்வியடைவது  இது 4வது முறையாகும். முதல் 3 முறையும் யுவராஜ் சிங்கிற்கு இந்த நிலை ஏற்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP