கோலி காலில் விழுந்து செல்பி எடுத்த ரசிகர்!

டெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த விராத் கோலியின் கால்களில் விழுந்து ரசிகர் ஒருவர் செல்பி எடுத்துக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
 | 

கோலி காலில் விழுந்து செல்பி எடுத்த ரசிகர்!

கோலி காலில் விழுந்து செல்பி எடுத்த ரசிகர்!

டெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலியின் கால்களில் விழுந்து ரசிகர் ஒருவர் செல்பி எடுத்துக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் நேற்றுமுன் நடைபெற்ற போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் பெங்களூர் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கோலி காலில் விழுந்து செல்பி எடுத்த ரசிகர்!

இந்நிலையில், போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி வந்து, விராட் கோலியின் காலில் விழுந்தார். என்ன செய்ய போகிறார் என அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அவரை பிடிக்க முயன்றனர். உடனே அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என கூறிய கோலி, காலில் விழுந்த ரசிகரை தூக்கிவிட்டு, அவரிடம் பேசினார். அதன் பின் அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP