Logo

பாகிஸ்தான் ஹாக்கி வீரரின் மருத்துவ செலவை ஏற்கிறது இந்தியாவின் ஃபோர்டிஸ்

பாகிஸ்தானின் ஹாக்கி லெஜெண்ட் மன்சூர் அஹ்மதுக்கு இலவசமாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய இந்திய மருத்துவமனை முன்வந்துள்ளது.
 | 

கடந்த வாரம் மன்சூர் அஹ்மத் பலவீனமாக இருக்கும் தனது இதயத்தின் பிரச்னைக்கு ஒரே தீர்வு இதய மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், இந்திய அரசிடம் மருத்துவ விசாவிற்காக கோரிக்கை வைத்தார். "நான் உங்களிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தியா எனக்கு உதவி செய்ய ஒத்துழைப்பை கேட்கிறேன். சிகிச்சைக்காக இந்தியா எனக்கு விசா வழங்கி உதவி செய்யும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில், மன்சூர் அஹ்மதுக்கு மருத்துவ விசா வழங்கும் பட்சத்தில், இந்தியாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனை அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்று அறிவித்துள்ளது. மும்பை மற்றும் சென்னையில் அவரது பெயர் பதிவு செய்யப்படும் என்று ஃபோர்டிஸ் மருத்துவமனை தெரிவித்தது.

மன்சூர் அஹ்மத், பாகிஸ்தான் ஹாக்கி அணியில், 1986 முதல் 2000 வரை அசைக்கமுடியாத நட்சத்திரம். 1989ம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி இந்திரா காந்தி கோப்பையை பாகிஸ்தான் வெல்ல முக்கிய புள்ளியாக அஹ்மத் இருந்தார். 1994ம் ஆண்டு நெதர்லாந்தை தோற்கடித்து உலக கோப்பையை வென்று கொடுத்த ஹீரோவும் இவர் தான். 338 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அஹ்மத், மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP