தோல்வியடைந்த கால்பந்து வீரர்களை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

போர்ச்சுகல் நாட்டின் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் கால்பந்து அணியின் சில ரசிகர்கள், அந்த அணியின் பயிற்சி வளாகத்திற்குள் புகுந்து, வீரர்கள், பயிற்சியாளர், மற்றும் ஊழியர்களை அடித்து துவம்சம் செய்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
 | 

போர்ச்சுகல் கால்பந்து லீக் போட்டிகள் கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்தன. போர்ட்டோ அணி லீக் கோப்பையை கைப்பற்றியது. முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட தகுதி பெறுவர்கள். இரண்டவது இடத்தில் இருந்த ஸ்போர்ட்டிங், மரிட்மோ என்ற அணியுடன் மோதியது. இந்த போட்டியில் கடைசி நிமித்தில் கோல் கீப்பர் செய்த தவறால் அந்த அணி தோற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்போர்ட்டிங்கின் பரம எதிரிகளான பென்ஃபிகா அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழந்ததால், கடும் கோபத்தில் இருந்த ஸ்போர்ட்டிங்கின் அல்டரா எனப்படும் தீவிர ரசிகர்கள், நேற்று அணியின் பயிற்சி வளாகத்திற்குள் புகுந்தனர். 

முகமூடிகள் அணிந்து வந்த அவர்கள், அணியின் வீரர்களை கத்தி கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். ஜெர்மனியை சேர்ந்த வீரர் பாஸ் தோஸ்த், இந்த தாக்குதலில் படுகாயமடைந்தார். இந்த சீசனில் மட்டும் அவர் இதுவரை 34 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அணியின் சிறப்பு மருத்துவர் உட்பட சிலர் கத்தியால் குத்தப்பட்டனர்.  

ஏற்கனவே அந்த அணி வீரர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பெரும் சர்ச்சை இருந்து வந்த நிலையில், இந்த சம்பவத்தால் பல வீரர்கள் தங்களது கான்ட்ராக்டை ரத்து செய்துவிட்டு அணியை விட்டு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்திய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP