ஐ.பி.எல்-ல் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்

ஐ.பி.எல் தொடரில் இருந்து விரைவில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேற உள்ளனர்.
 | 

ஐ.பி.எல்-ல் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்

ஐ.பி.எல்-ல் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்

ஐ.பி.எல் தொடரில் இருந்து விரைவில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேற உள்ளனர். 

11-வது ஐ.பி.எல் போட்டியில் நான்கு சிறந்த இங்கிலாந்து டெஸ்ட் வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), மார்க் வுட் (சென்னை சூப்பர் கிங்ஸ்), மொயின் அலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போது இவர்கள் தேசிய அணிக்காக, ஐ.பி.எல் போட்டியில் இருந்து பாதிலேயே வெளியேற உள்ளனர். 

வருகிற மே 24ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்க இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்க இருக்கிறது. இதற்காக மே 17ம் தேதி இங்கிலாந்தில் இவர்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஐ.பி.எல் தொடர் முக்கிய கட்டத்தை எட்டும் நேரத்தில் இவர்கள் செல்ல இருக்கின்றனர். 

ஐ.பி.எல்-ல் மிகவும் விலையுயர்ந்த வீரரான பென் ஸ்டோக்ஸ், ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்படாதது கவலை அளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில போட்டிகளில் மட்டுமே களமிறங்கிய மார்க் வுட், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெங்களூரு அணிக்காக இடம் பெற்ற கிறிஸ் வோக்ஸ், ஏகப்பட்ட ரன்களை தாரைவார்த்ததால் அவருக்கு பதில் டிம் சௌதீ அணியில் இடம் பிடித்துள்ளார். இதே அணியில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு இங்கிலாந்து வீரரான மொயின் அலி, பெங்களூரு ஆடிய 10-வது போட்டியில் தான் களமிறக்கப்பட்டார். 

இங்கிலாந்து வீரர்களை தவிர, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவும், ஐ.பி.எல்-ல் இருந்து விரைவில் வெளியேற உள்ளார். ஜூன் 6ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை விளையாட இருக்கிறது. மே 30ம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடக்கிறது. இப்போட்டிக்காக அகில, ஐ.பி.எல்-ல் இருந்து விலகி, தேசிய அணியில் இணையவிருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP