கொல்கத்தாவின் நாகர்கோட்டி ஐ.பி.எல்-ல் இருந்து விலகல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி ஐ.பி.எல் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார்.
 | 

2018 ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா இதுவரை சந்தித்த இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. இன்று தனது மூன்றாவது ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா மோதுகிறது. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் யு-19 அணி வேகப்பந்து வீச்சாளர் நாகர்கோட்டி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இருந்தே விலகியுள்ளார். அவரை கொல்கத்தா அணி ரூ.3.2 கோடி கொடுத்து வாங்கியது. 

நாகர்கோட்டிக்கு பதில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மாற்று வீரராக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே முன்னணி வேகபந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இரண்டாவது வேகப்பந்து வீச்சாளரையும் தற்போது கொல்கத்தா அணி இழந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP