தோனியின் "ஆனந்த யாழை" தருணம்

ஐபிஎல் சாம்பியன் பட்ட பெற்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி தனது மகளுடன் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

தோனியின் "ஆனந்த யாழை" தருணம்

தோனியின் "ஆனந்த யாழை" தருணம்ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி தனது மகளுடன் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து கோப்பையை வாங்கிய தோனி வழக்கம் போல மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு பின்னால் நின்றார். அப்போது அவரிடம் ஓடி வந்த ஸிவாவை தூக்கி சுத்தினார். பின்னர் சாம்பியன் போர்ட்டுக்கு பின் நின்றார். இதுபோன்று தோனி முன்னாள் வந்து நின்றதில்லை. ஸிவாவுடன் மட்டுமே முதன் முதலாக தோனி முன்னாள் வந்து நின்றிருக்கிறார். 


பின்னர் சக வீரர்களுடன் பாடல் பாடி தோனி கொண்டாடினார். தோனியும் ஸிவாவும் எப்போதும் இணையத்தில் ஹிட் கொடுப்பவர்கள். இறுதிப்போட்டிக்கு பின் மைதானத்தில் இருந்தவர்கள் தோனி ஸிவாவோடு விளையாடுவது, தூக்கி கொண்டு மைதானத்திற்குள் சுற்றுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். தோனி ஒருவருடன் பேசி கொண்டு இருக்கும் போது ஸிவா தோனிக்கு ஜூஸ் கொடுப்பது கூட ரசிகர்கள் கண்ணில் இருந்து தப்பவில்லை. 

அதன் பின் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் கோப்பை ஏந்தி நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், "எங்களை ஆதரித்தவர்களுக்கும், மும்பையை மஞ்சளாக மாற்றியவர்களுக்கும் நன்றி. ஷேன் ஷாக்கிங் வாட்சன் அவரது ஆட்டத்தால் அனைவரைக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டார். நல்ல கிரிக்கெட் சீசன் முடிவடைந்துவிட்டது. ஸிவாவிற்கு கோப்பையை பற்றி கவலை இல்லை. அவர் பேச்சை கேட்டு மைதானத்தில் ஓடி விளையாட வேண்டும் என்று நினைக்கிறாள்" என்று பதிவிட்டுள்ளார்.  


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP