தோனி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு நல்லது: கோலி

தோனி சிறப்பாக பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு நல்லது தான் என நேற்றைய தோல்விக்கு பின் விராட் கோலி தெரிவித்தார்.
 | 

தோனி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு நல்லது: கோலி

தோனி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு நல்லது: கோலிதோனி சிறப்பாக பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு நல்லது தான் என நேற்றைய தோல்விக்கு பின் விராட் கோலி கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. 

தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ''கடினமாக போராடி தான் தோல்வி அடைந்தோம். ஆனால் சில கேட்ச்களை விட்டிருக்க கூடாது. இது எங்களுக்கான நாள் அல்ல. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கடுமையாக உழைத்தோம். 

குறைவான ரன்கள் எடுத்திருக்கும் போது போட்டி கடினமாக தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். பேட்டிங்கின் போது ரன்கள் எடுக்க முடியவில்லை. விரைவில் அதிகமான விக்கெட்களை இழந்துவிட்டோம். இந்த பிட்ச் ஆச்சரியமளித்தது. தோனி சிறப்பாக ஆடுவதை பார்ப்பதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். இது இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்லதும் கூட. சென்னை அணி வெற்றிக்கு தகுதியானது.

இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. முன்னர் நடந்த ஐபிஎல் தொடர்களில் இது போன்ற சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். எதிர்வரும் போட்டிகளை நேர்மறையான எண்ணத்துடன் எதிர்கொள்ள வேண்டும்'' என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP