தோனி அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி, ஆனால்... தோல்வி குறித்து கோலி

தோனி அதிரடியாக விளையாடுவது நன்றாக இருக்கிறது என்றாலும், எங்கள் அணிக்கு எதிராக விளையாடுவதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 | 

தோனி அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி, ஆனால்... தோல்வி குறித்து கோலி

தோனி அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி, ஆனால்... தோல்வி குறித்து கோலிதோனி அதிரடியாக விளையாடுவது நன்றாக இருக்கிறது என்றாலும், எங்கள் அணிக்கு எதிராக விளையாடியதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, பிட்ச் சிறப்பாக இருந்தது. எங்கள் அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். நாங்கள் பந்துவீச்சில் இன்று நிறைய சொதப்பி விட்டோம். 4 ஓவர்களில் 72 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் எடுப்பது பெருங்குற்றம். இதை பற்றி நாங்கள் நிச்சயம் சித்திக்க வேண்டும். 200 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை என்றால் அணியில் பெரிய பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம். இன்றைய தோல்வியை ஏற்றுக்கொள்ள கடினமாக தான் இருக்கிறது. ஆனால் இது சென்னையின் சிறப்பான வெற்றி. 

சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். எங்கள் அணிக்கும், எதிரணிக்கும் சுழற்பந்து சாதகமாக இருந்தது. இரு அணிகளின் பேட்டிங்கும் இன்று தரமாக இருந்தது. ரசிகர்களுக்கு இது மிகவும் ஆர்வமான போட்டியாக இருந்திருக்கும். ராயுடு 15 வருடங்களாக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அந்த அனுபவம் அவர் ஆட்டத்தில் தெரிந்தது. 

தோனி அதிரடியாக விளையாடுவதை பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் எங்கள் அணிக்கு எதிராக விளையாடியதால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். பேட்டிங் வரிசையில் முன்னரே களத்தில் இறங்கி அதனை அனுபவித்து விளையாடி வருகிறார் என்று கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP