இன்று டெல்லி- பெங்களூரு மோதல்: விராட் கோலி விலகல்?!

ஐ.பி.எல் சீசனில் இன்று (12ம் தேதி) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
 | 

இன்று டெல்லி- பெங்களூரு மோதல்: விராட் கோலி விலகல்?!

இன்று டெல்லி- பெங்களூரு மோதல்: விராட் கோலி விலகல்?!

ஐ.பி.எல் சீசனில் இன்று (12ம் தேதி) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு துவங்கும் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா, 8 மணிக்கு டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

11-வது சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. வெற்றிக்காக போராடி வரும் பெங்களூரு அணி, டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கேப்டன் விராட் கோலி இதில் பங்கேற்பாரா என்று உறுதியாக தெரியவில்லை.

ஏனெனில், இன்றைய வலைப்பயிற்சி ஆட்டத்தில் விராட் பங்கேற்கவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்று தெரிகிறது. இதனால் ஏபி டி வில்லியர்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணி, 10 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. மேலும் அந்த அணி இன்னும் பிளே-ஆஃப் சுற்றுக்கள் தகுதியை இழக்கவில்லை. 

பெங்களூரு எதிர்கொள்ள இருக்கும் அடுத்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை பெரும். அடுத்தடுத்த போட்டிகளில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP