ஆசிய போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றார்

ஆடவருக்கான 10மீ ரைஃபிள் ஆசிய போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 | 

ஆசிய போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றார்

ஆடவருக்கான 10மீ ரைஃபிள் ஆசிய போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

18-வது ஆசிய போட்டி இந்தோனேசியாவின் பலேம்பாங் மற்றும் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவருக்கான 10மீ ரைஃபிள் பிரிவு போட்டியில், இந்திய வீரர் தீபக் குமார் 247.7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். சீனாவின் ஹாரன் யாங், 249.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். சீன தைபேவின் ஷொச்சுங் லு (226.8) வெண்கலப் பதக்கம் பெற்றார். 

இதன் மூலம், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது பதக்கமும், ஒட்டுமொத்தமாக 3-வது பதக்கமும் கிடைத்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP