ட்விட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

ட்விட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பற்றிய பதிவுக்கு மூன்று தோனி படங்களை பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 | 

ட்விட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

ட்விட்டரில்  மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பற்றிய பதிவுக்கு மூன்று தோனி படங்களை பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. 

ஐ.பி.எல்லின் சிங்கம் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். இந்த கிரிக்கெட் தொடரில் உள்ள மற்ற அணிகள் அனைத்தும் சேர்ந்து சென்னை அணியை எதிர்கொள்வதை தான் அந்த தொடர் முழுக்க பார்த்து வருகிறோம். அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா,பொலார்ட், க்ருனால் பாண்டியா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை பதிவிட்டு இருந்தது. அந்த பதிவில் இதை விட சிறந்த ஆல்ரவுண்டர்களை காட்டுங்கள்... காத்திருக்கிறோம் என பதிவிட்டு இருந்தது. 

இதற்கு பதில் அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரஷித் கான், முகது நபி மற்றும் ஷகிப் அல் ஹசன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தது. அந்த பதிவில் காத்திருப்பு முடிந்தது எனவும் குறிப்பிட்டு இருந்தது. 

 

 

அதனை கிண்டல் செய்த மும்பை இந்தியன்ஸ், தனது மூன்று கோப்பைகளின் புகைப்படத்துடன் காத்திருப்பு தொடரும் என பதிவிட்டு இருந்தது. 

இதெற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தோனியின் புகைப்படத்தை மூன்று வண்ணத்தில் பகிர்ந்து மூன்று முகம் என பதிவிட்டு உள்ளது. 

 

 

இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP