ப்ரீத்தி ஜிந்தாவுடன் மோதல்... பஞ்சாபை விட்டு வெளியேறுகிறார் சேவாக்?

பஞ்சாப் அணி ஆலோசகர் விரேந்தர் சேவாக்குடன் மோதலில் ஈடுபட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
 | 

கடந்த 8ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 158 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தூணாக விளங்கும் கிறிஸ் கெய்ல் 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில், கேப்டன் அஷ்வின் களம் கண்டு, டக்-அவுட்டானார். இந்த போட்டியில் பஞ்சாப் 15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. துவக்க வீரர் ராகுல் 95 ரன் எடுத்து அதிரடி காட்டியும் வெற்றி பெற முடியவில்லை. 

ப்ரீத்தி ஜிந்தாவுடன் மோதல்... பஞ்சாபை விட்டு வெளியேறுகிறார் சேவாக்?

தோல்விக்கு முக்கிய காரணமாக அஷ்வின் குற்றம்சாட்டப்பட்டார். இதில் முக்கிய பங்கு ஆலோசகருக்கு தான் என்று உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, சேவாக்கிடம் கோவப்பட்டு வாக்குவாதம் செய்ததாக, மும்பை மிர்ரர் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டது. மேலும், இந்த மோதல் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் வெளியேற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் தவறான செய்தி. சேவாக் எனக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையே, என்னை வில்லனாக்கியது" என்று குற்றிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இருவருமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை ப்ரீத்தி ஜிந்தாவே உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இந்த வாக்குவாதம் எந்த அளவுக்கு தீவிரமாக சென்றது என தெரியவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP