சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்ற உலகின் தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கையின் முத்தையா முரளிதரனின் 46வது பிறந்தாள் இன்று!
 | 

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்ற உலகின் தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கையின் முத்தையா முரளிதரனின் 46வது பிறந்தாள் இன்று!

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

இலங்கையின் கண்டி பகுதியில் 1972ம் ஆண்டு பிறந்தவர் முத்தையா முரளிதரன். இவரது பூர்வீகம் தமிழகத்தின் திருச்சிதான். பிரிட்டீஷ் ஆட்சி காலத்தின்போது, இலங்கையில் தேயிலை தோட்ட பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்றவர்களில் முத்தையாவின் தாத்தாவும் ஒருவர். ஆனால், பல வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு மீண்டும் திருச்சிக்கு வந்துவிட்டார் முத்தையாவின் தாத்தா. ஆனால், முத்தையாவின் அப்பா மட்டும் இலங்கையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

பள்ளிக்காலம் முதலே முத்தையாவிற்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருந்துள்ளது. முதலில் மீடியம் வேகபந்து வீச்சாளராக தொடங்கிய இவர் சுழல் பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறியதை பார்த்து அதற்கு மாறிவிட்டாராம்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதன்முதலில் தனத டெஸ்ட் பயணத்தை தொடங்கினார்.1998ம் ஆண்டு இங்கிலாந்தின் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் முத்தையா 16 விக்கெட்களை எடுத்தார். அந்த போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது தான் மறக்க முடியாத போட்டி என்று முத்தையா பல முறை கூறியுள்ளார். அதற்கு காரணம் இங்கிலாந்து மண்ணில் இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றி அது.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

முத்தையாவின் வாழ்வில் சாதனைகளுடன் சர்ச்சைகளும் சேர்ந்தே இருந்தன. அவர் பந்துவீசும் போது அவரது உடல்மொழி வித்தியாசமாக இருக்கவே, அது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நடுவர்கள் முத்தையா விதிமுறைகளுக்கு மீறி பந்துவீசிகிறார் என்று பல முறை நோ-பால் கொடுத்தனர். அதன் பின் அவர் பந்துவீசுவது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது, பின்னர் அவரது பந்துவீச்சு முறை ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

தான் பார்த்ததிலேயே தோனி தான் தலைசிறந்த இந்திய கேப்டன் என்றும் தோனி எத்தனை உயரும் போனாலும் அதனால் தலைகனம் அடைவில்லை, அவர் எப்போதும் சீனியர் பிளேயர்கள் கொடுக்கும் அறிவுரைகளை கேட்டுக்கொள்வார் என்றும் முத்தையா தெரிவித்துள்ளார்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

முத்தையா, அஸ்வினை பலமுறை புகழ்ந்து உள்ளார். அஸ்வினுக்கு முத்தையா தான் ரோல்மாடல். ஒரு முறை முத்தையா வீட்டிற்கு அஸ்வின் சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் அஸ்வின் குறித்து முத்தையா கூறும்போது, அஸ்வின் உலகில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர். ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் யாரும் வைக்காத நம்பிக்கையை அஸ்வின் மீது தோனி வைத்தார். அவருக்கு பல முறை வாய்ப்புகள் கொடுத்து திறமையை வளர்க்க தோனி உதவினார். அதுதான் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட காரணமாக இருந்தது. அஸ்வின் பந்துவீச்சில் மிக பெரிய உச்சத்தை தொடுவார் என்று கூறினார்.

முத்தையா முரளிதரன், ஐபிஎல் போட்டியில் 2008-2010 வரை சென்னைக்காகவும், 2011ல் கொச்சிக்காவும், 2012-14 வரை பெங்களுரு அணிக்காவும் விளையாடி உள்ளார். தற்போது ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

2007 முதல் ஷேன் வார்னே-முத்தையா கோப்பை என்ற பெயரில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாட்டின் தலைச் சிறந்த பவுளர்களை கவுரவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த தொடரின் வெற்றிக் கோப்பையில் முத்தையா மற்றும் வார்னேவின் கைகள் பந்து வீசுவது போன்ற சிலை அமைந்திருக்கும்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

முத்தையா இதுவரை அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 1347விக்கெட்களை எடுத்துள்ளார். 1000 விக்கெட்களை எடுத்த இரண்டே வீரர்களில் முத்தையா முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஷேன் வார்னே 1001 விக்கெட்களுடன் இருக்கிறார். முத்தையா டெஸ்டில் 800, ஒரு நாள் போட்டியில் 534 மற்றும் டி20ல் 13 விக்கெட்களை எடுத்துள்ளளார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமை இன்னும் முத்தையாவிடம் தான் உள்ளது.

பேட்டிங்கில் சச்சின் எப்படி பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளாரோ அது போல பந்துவீச்சில் முரளிதரன். டெஸ்டில் அதிக முறை 10 விக்கெட்கள் எடுத்தது, பல முறை தொடர் நாயகன் விருது பெற்றது, 4 முறை தொடர்ந்து 10 விக்கெட் எடுத்தது, அதிக முறை பவுல்ட்டு, ஸ்டம்பிங் மற்றும் காட் அண்ட் பவுல்டு முறையில் விக்கெட்டை கைப்பற்றியது, அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராகவும் 10 விக்கெட் எடுத்தது என தினுசு தினுசாக சாதனைகளை செய்துள்ளார்.
மேலும் அதிக முறை டக் அவுட் (59) ஆனவர் என்ற மோசமான சாதனையையும் செய்துள்ளார்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என்பது போல எப்போதும் முகத்தில் சிரிப்புடன் இருப்பவர். இவரது மனைவிக்கு முத்தையாவின் சிரிப்பு தான் பிடிக்குமாம். சென்னையை சேர்ந்த மதுமலரை 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் முத்தையா. மதுமலர் சென்னையில் பிரபலமாக இருந்த மலர் மருத்துவமனை உரிமையாளரின் மகள்.

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

2010ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2011ல் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றார். இவரது கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இந்தியாவிற்கு எதிரானது. டெஸ்ட்போட்டியில் முத்தையாவின் கடைசி பந்தில் விக்கெட் இழந்தவர் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா. இது தான் அவரது 800வது விக்கெட்டும் கூட.

சச்சினை போல இனி ஒரு வீரர் வர முடியாது என உறுதிப்பட கூறுவார் முத்தையா முரளிதரன். அதேபோல முத்தையா போலவும் ஒரு வீரரை கிரிக்கெட் சமூகம் பார்ப்பது சந்தேகமே!

சுழல் வித்தைக்காரர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP