ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நேற்று சீனாவின் வுஹான் நகரில் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்திய முன்னணி போட்டியாளர்கள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
 | 

கோல்டுகோஸ்ட் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா, தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துவக்க போட்டியில் சிங்கப்பூரின் எவ் ஜியா மின்னை 21-12, 21-9 என்ற நேர்செட் கணக்கில் சாய்னா வென்றார். சாய்னாவின் தோல்வி கண்டு வெள்ளி வென்ற பி.வி.சிந்து, சீன தைபேவின் பய் யு போவை 21-14, 21-19 என வீழ்த்தினார்.  

ஆண்கள் பிரிவில், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி, 13-21, 21-16, 21-16 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை போராடி வென்றார். மற்ற இந்திய வீரர்களான சாய் பிரனீத், ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சமீர் வர்மா தோல்வி அடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், அர்ஜுன் - ராமசந்திரன் ஷ்லோக்; பெண்கள் இரட்டையரில் மேகனா - பூர்விஷா இலைகளும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். 

கலப்பு இரட்டையர் பிரிவில், சௌரப் சர்மா - அனோஸ்கா பரிக்; வெங்கட் கௌரவ் பிரசாத் - ஜூஹி கூட்டணி தோல்வி அடைந்து வெளியேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP