வில்வித்தை உலகக்கோப்பை: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

ஆறு வருட இடைவெளிக்கு பிறகு இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார்.
 | 

வில்வித்தை உலகக்கோப்பை: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

துருக்கியின் சாம்சன் நகரில் வில்வித்தை உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆறு வருட இடைவெளிக்கு பிறகு இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார். 

2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த தீபிகா, வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றிருந்தார். அவர், 2018 உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். இப்போட்டியில் அவர் 7-வது முறையாக களமிறங்குகிறார். இதில் ஜெர்மனியின் மிச்செல்லே க்ரோப்பேனை 7-3 என வீழ்த்தி, தீபிகா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சீன தைபேவின் தன் யா-டிங், நெதர்லாந்தின் கேப்ரியலா பயர்டோவை 7-1 என வீழ்த்தி வெண்கலம் வென்றார். 

பதக்கபட்டியலில், இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, கொலம்பியா, சீன தைபே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP