கொல்கத்தாவுக்காக நடிகர் ஷாருக்கானின் இதயப்பூர்வமான செய்தி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி கண்ட போதிலும் நடிகர் ஷாருக் கான் மனம் திறந்து பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 | 

ஐ.பி.எல் நாக்கவுட் சுற்றில் ஹைதராபாத் அணியிடம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. வெற்றிக்காக கடைசி  வரை கொல்கத்தா அணி கடுமையாக போராடியதை மறுக்க முடியாது. ஈடன் கார்டனில் நடந்த இப்போட்டியை காண கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக் காணும் வந்திருந்தார். கொல்கத்தாவின் இந்த தோல்வி ஷாருக்கானிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தாலும், அணியின் முயற்சியை அவர் பாராட்டினார். 

அவரது டீவீட்டில், "இறுதி போட்டிக்காக நான் புக் செய்த டிக்கெட்டை இப்போது ரத்து செய்ய வேண்டும். நீங்கள் பெருமைபட்டுக் கொள்ளவேண்டும். நீங்கள் (கே.கே.ஆர்) சிறப்பாக செயல்பட்டீர்கள். அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். லவ் யு. இப்போதும் நான் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். பொழுதுபோக்கிற்கு நன்றி. பல பெருமையான நினைவுகள்" என்று குறிப்பிட்டு அவர் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். 

இதற்கு கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் லின், "இந்த இரண்டு மாதங்களுக்கும் உங்களுக்கு நன்றி. உங்களைவிட ஒரு சிறந்த உரிமையாரை கேட்க முடியாது. குடும்பமாக கொல்கத்தா அணி மற்றும் பயிற்சியாளர்களும் மிகுந்த ஆதரவளித்தனர். மீண்டும் வலிமையாக களமிறங்குவும்" என்றார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP