வேற யாருக்கும் இல்ல... இந்தியாவுக்கு தான் இன்னைக்கு வாழ்வா... சாவா... மேட்ச்!

உலகக்கோப்பை போட்டிகளில் யாரும் எதிர்பாராத விதமாக. வங்கதேச அணி ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடி வருகிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அந்த அணி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.
 | 

வேற யாருக்கும் இல்ல... இந்தியாவுக்கு தான் இன்னைக்கு வாழ்வா... சாவா... மேட்ச்!

இரண்டு நாளுக்கு முன்பு வரை, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே காணாத அணி என்ற கெத்துடன் வலம் வந்துக் கொண்டிருந்த அணிதான் இந்தியா. ஆனால், வங்கதேசத்துடன் நடைபெறும் இன்றைய போட்டியில் ஜெயித்தால்தான் அரையிறுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எல்லாம், இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் தோற்றதால் வந்த வினை.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு, இந்தியாவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைதான் ஆகச்சிறந்த உதாரணம்.

அதாவது, ஒரு அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கலாம். அந்த அணி வீரர்கள் பல்வேறு உலக சாதனைகளை படைத்திருக்கலாம். ஆனால், ஒன்டே மேட்ச் என வந்துவிட்டால், டாஸில் ஜெயிப்பதிலிருந்து, பிட்ச் நிலவரம், மழை என பல்வேறு காரணிகள் தான் ஒரு அணியின் வெற்றிி, தோல்வியை தீர்மானிக்கின்றன.

சரி போகட்டும்.... நடப்பு உலக்கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா பெற்ற தோல்வியே முதலும், கடைசியுமாக இருக்கட்டும். அந்தப் போட்டியில், கடைசி ஆறு ஓவர்களில் ரன்களை வாரி கொடுத்ததும், பதிலுக்கு அதே கடைசி ஐந்து ஓவர்களில் தேவையான அளவுக்கு ரன்களை சேர்க்க முடியாமல் போனதுமான தவறுகளை, இந்தியா திரும்ப செய்யாமலிருந்தாலே இன்று வெற்றி பெற்றுவிடலாம்.

அதேசமயம், உலகக்கோப்பை போட்டிகளில் யாரும் எதிர்பாராத விதமாக. வங்கதேச அணி ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடி வருகிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அந்த அணி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இருந்தாலும் சரி... ஆஸ்திரேலியா உடனான போட்டியில் தோல்வியை தழுவினாலும் 300 பிளஸ் ரன்களை அசால்ட்டாக அடித்ததாக இருந்தாலும் சரி... வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு ஆட்டத்திலும் வங்கதேசம் சிறப்பாக ஆடி வருகிறது. அத்துடன், உலகக்கோபு்பை கிரிக்கெட் தொடரில் முன்பொரு முறை இந்தியாவை தோற்கடித்த அனுபவமும் வங்கதேசத்துக்கு உண்டு.

மேலும் அந்த அணி, 7 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பதால், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிக்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க வங்கதேச அணி வீரர்கள் தயங்கமாட்டார்கள். எனவே. இந்தியாவுக்கு இன்று சவாலான நாளாகவே இருக்கும். ஆனால், இந்த சவாலில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என நம்புவோம் நண்பர்களே....

வேற யாருக்கும் இல்ல... இந்தியாவுக்கு தான் இன்னைக்கு வாழ்வா... சாவா... மேட்ச்!

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்
.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP