சர்வதேச சதுரங்கப் போட்டி: வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற 11ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
 | 

சேலம் மரவனேரி பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 11ஆம் வகுப்பு மாணவன் நவீன் என்பவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி கௌரவித்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP